இந்தியா
ரெப்பொ வட்டி விகிதம் 25 புள்ளிகள் உயர்த்தப்படுகிறதா? என்ன செய்ய போகிறது ரிசர்வ் வங்கி..!

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது என்பதும் அதன் காரணமாக வங்கிகளில் லோன் வாங்கிய அவர்களின் பாடு திண்டாட்டமாக உள்ளது என்றும் ஆனால் அதே நேரத்தில் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தவர்கள் கொண்டாட்டமாக உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் அமெரிக்க பெடரல் வங்கி 25 புள்ளிகள் வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து இங்கிலாந்து உள்பட ஒரு சில நாடுகளும் உயர்த்தி உள்ளன. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியும் 25 புள்ளிகள் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும் என பொருளாதார நிபுணர்கள் கணித்து உள்ளனர்.

rbi
2023 – 24 ஆம் நிதி ஆண்டுக்கான இரு மாத நாணய கொள்கை குழு ஏப்ரல் 3, 5, 6 ஆகிய தேதிகளில் கூட உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு அம்சங்களை ஆராய இருப்பதாகவும் குறிப்பாக சில்லறை பணவீக்கம் மற்றும் வளர்ந்த நாடுகளில் உயர்த்தப்படும் வட்டி விகிதம் குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வரும் நிலையில் தற்போது நடைபெற உள்ள கூட்டத்திலும் 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
தற்போதைய இறுக்கமான சூழ்நிலையில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டாலும் இது கடைசி வட்டி விகித உயர்வாக இருக்க வாய்ப்புள்ளது என பொருளாதார நிபுணர் மதன் என்பவர் அறிவித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் அவர்கள் கடந்த மாதம் இது குறித்து பேசிய போது ’தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போர் ஆகியவை காரணமாக உலக பொருளாதாரத்திற்கு பல அதிர்ச்சிகள் இருந்தபோதிலும் இந்திய பொருளாதார மற்றும் நிதிநிலை சீராக உள்ளது என்றும் ஆனால் அதே நேரத்தில் மோசமான பணவீக்கம் நமக்கு பின்னே உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்..