Connect with us

சினிமா செய்திகள்

தமிழ்‌ நெஞ்சங்களில்‌ நீங்கா இடம்‌ பிடித்திருப்பார்: விவேக் மறைவு குறித்து முதல்வர் ஈபிஎஸ்!

Published

on

காமெடி நடிகர் விவேக் இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில் அவரது மறைவு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ் நெஞ்சங்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த விவேக் என்று கூறியுள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது;

தமிழ்த்‌ திரையுலகினராலும்‌, திரைப்பட ரசிகர்களாலும்‌ “சின்னக்கலைவாணர்‌” என அழைக்கப்படுவரும்‌, தமிழ்‌ சினிமா உலகில்‌ புகழ்பெற்ற நடிகருமான திரு. விவேக்‌ அவர்கள்‌ உடல்நலக்‌ குறைவு காரணமாக மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை (17.4.2021) உயிரிழந்தார்‌ என்ற செய்தியை அறிந்து நான்‌ மிகுந்த மன வேதனை அடைந்தேன்‌.

திரு. விவேக்‌ அவர்கள்‌ தலைமைச்‌ செயலகத்தில்‌ பணியாற்றி பின்னர்‌ திரைப்படத்துறையில்‌ நாட்டம்‌ கொண்டு “மனதில்‌ உறுதி வேண்டும்‌” என்ற படத்தின்‌ மூலம்‌ நடிகராக தன்னுடைய கலையுலக வாழ்க்கையைத்‌ தொடங்கினார்‌. சுமார்‌ 30 ஆண்டுகளுக்கும்‌ மேலாக தமிழ்‌ திரையுலகில்‌ சிறந்த நடிகராக தன்னுடைய ஆளுமையை கோலனோச்சியவர்‌.

திரு. விவேக்‌ அவர்களின்‌ நடிப்பில்‌ வெளிவந்த “திருப்பதி ஏழுமலை வெங்கடேசா” “உன்னருகே நானிருந்தால்‌”, “பூவெல்லாம்‌ உன்‌ வாசம்‌”, “அந்நியன்‌”, “சிங்கம்‌”, “உத்தம புத்திரன்‌”, “வெடி”, “பெண்ணின்‌ மனதைத்‌ தொட்டு”, “பட்ஜெட்‌ பத்மநாபன்‌”, “தூள்‌” போன்ற எண்ணற்ற திரைப்படங்களில்‌ இவரது நடிப்பு சிரிக்க வைத்ததோடு மட்டுமின்றி சிந்திக்கவும்‌ வைத்தது.

மேலும்‌, திரு. விவேக்‌ அவர்கள்‌, தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும்‌ சமூக நலனைக்‌ குறிக்கோளாகக்‌ கொண்டு வாழ்ந்த சமூக ஆர்வலர்‌. இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத்‌ திகழ்ந்தவர்‌. சுற்றுச்‌ சூழல்‌ பாதுகாப்பு, மரம்‌ வளர்ப்பு. பிளாஸ்டிக்‌ தடை மற்றும்‌ கொரோனா பற்றிய விழிப்புணர்வு பணிகளில்‌ அரசிற்கு உறுதுணையாக திகழ்ந்தவர்‌. அதுமட்டுமின்றி, மறைந்த முன்னாள்‌ ஜனாதிபதி திரு. அப்துல்கலாம்‌ அவர்களின்‌ கனவை நினைவாக்கும்‌ வகையில்‌ “கிரீன்‌ கலாம்‌” என்ற அமைப்பின்‌ மூலம்‌ ஒரு கோடி மரக்கன்றுகள்‌ நடுவதை இலக்காக கொண்டு, அதனை தீவிரமாக செயல்படுத்தி வந்தவர்‌.

திரு. விவேக்‌ அவர்கள்‌ மிகவும்‌ எளிமையானவர்‌. பழகுவதற்கு மிகவும்‌ இனிமையானவர்‌. கலைத்துறையில்‌ இவருடைய ஈடு இணையற்ற பங்களிப்பிற்காக மத்திய அரசால்‌ வழங்கப்படும்‌ உயரிய விருதுகளில்‌ ஒன்றான பத்மஸ்ரீ விருது, தமிழக அரசால்‌ வழங்கப்படும்‌ கலைவாணர்‌ விருது மற்றும்‌ சிறந்த நகைச்‌ சுவை நடிகருக்கான விருதுகள்‌, ஃபிலிம்‌ஃபேர்‌ விருதுகள்‌ என எண்ணற்ற விருதுகளைப்‌ பெற்ற சிறப்புக்குரியவர்‌.

தனது ஈடு இணையற்ற கலைச்‌ சேவையாலும்‌ சமூக சேவையாலும்‌ தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த திரு. விவேக்‌ அவர்களின்‌ மறைவு, தமிழ்‌ திரைப்படத்‌ துறைக்கும்‌, ரசிக பெருமக்களுக்கும்‌, சமூக ஆர்வலர்களுக்கும்‌ மிகப்‌பெரிய இழப்பாகும்‌. அவருடைய இடத்தை இனி எவராலும்‌ நிரப்ப முடியாது. அன்னார்‌ மறைந்தாலும்‌, அவருடைய நடிப்பு மற்றும்‌ சமூக சேவை என்றென்றும்‌ தமிழ்‌ நெஞ்சங்களில்‌ நீங்கா இடம்‌ பிடித்திருக்கும்‌.

திரு. விவேக்‌ அவர்களை இழந்து வாடும்‌ அவரது குடும்பத்தினருக்கும்‌, ரசிகர்களுக்கும்‌, திரைப்படத்‌ துறையினருக்கும்‌ எனது ஆழ்ந்த இரங்கலையும்‌, அனுதாபத்தையும்‌ தெரிவித்துக்‌ கொள்வதுடன்‌, அன்னாரது ஆன்மா இறைவனின்‌ திருவடி நிழலில்‌ இளைப்பாற எல்லாம்‌ வல்ல இறைவனைப்‌ பிரார்த்திக்கிறேன்‌.

இவ்வாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.07.2026

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

எலும்புப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? இந்த எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

சினிமா21 மணி நேரங்கள் ago

‘Love Oh Love’ திரைப்பட விமர்சனம்: இளைஞர்களின் காதலை பேசும் படம்… ஆனால் கிளைமாக்ஸ் கைகொடுத்ததா?

ஆரோக்கியம்22 மணி நேரங்கள் ago

சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகள்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

குரு அஸ்தமனம் ஜூலை 15: 30 நாட்கள் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், நிதி முன்னேற்றம் கிடைக்குமா?

வணிகம்22 மணி நேரங்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

சுக்கிரன் பூரம் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், வெற்றி!

சினிமா22 மணி நேரங்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

இந்தியா22 மணி நேரங்கள் ago

WhatsApp ஸ்கிரீன்ஷாட் ரயில் டிக்கெட் செல்லாது.. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

ஆரோக்கியம்22 மணி நேரங்கள் ago

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 7 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்யாதீர்கள்!

இந்தியா5 நாட்கள் ago

பார்ட்டி ஃபண்ட் பணம் அரசுக் கணக்கில் சேர்க்க முடியுமா? விதிகள் என்ன சொல்கின்றன?

இந்தியா7 நாட்கள் ago

யூஸர்நேம் வசதியால் எந்த வித மோசடிக்கும் வாய்ப்பில்லை – வாட்ஸ் ஆப் நிறுவனம் மத்திய அரசுக்கு விளக்கம் அளித்தது

ஆன்மீகம்5 நாட்கள் ago

சம்பாபதி அம்மன் கோயிலும் ’பொய் பேசினால் கொன்று விடும்’ சதுக்க பூதங்களும்

வணிகம்6 நாட்கள் ago

EPS 2026 புதிய திட்டம்: ரூ.1,000 ஓய்வூதியம் உயர்ந்ததா? EPF உறுப்பினர்களுக்கான முக்கிய மாற்றங்கள் என்ன?

கட்டுரைகள்5 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (05/07/2026)!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

இந்தியா5 நாட்கள் ago

சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நெய்மர் அறிவிப்பு

செய்திகள்5 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 60% DA அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய அப்டேட்!

Translate »
專業 it方案 ,提供全面的技術解決方案 | tech computer company. Web content accessibility guidelines 2. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene.