Connect with us

சினிமா செய்திகள்

குஞ்சுமோனின் ‘ஜெண்டில்மேன் 2’ படத்தில் இணைந்த பிரபலத்தின் மகள்!

Published

on

பிரபல தயாரிப்பாளர் குஞ்சுமோன் தயாரித்த ஜென்டில்மேன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராக உள்ளது.

இந்த படத்தை கோகுல் கிருஷ்ணா என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் பணிபுரியும் நட்சத்திரங்கள் மற்றும் டெக்னீஷியன்கள் குறித்த அறிவிப்பை அவ்வப்போது தயாரிப்பாளர் குஞ்சுமோன் வெளியிட்டு வருகிறார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பிரபல கலை இயக்குனர் தோட்டா தரணி மற்றும் அவருடைய மகள் இந்த படத்தில் இணைந்து உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த படத்தின் கலை இயக்குனர் தோட்டா தரணி மற்றும் அவரது மகள் ஆகிய இருவரும் இணைந்து பணிபுரிய இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் வெளியான பின்னர் தான் தோட்டாதரணி மகள் ஒரு கலை இயக்குனர் என்பது பலருக்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Nordicnodes | free tools to grow your website & social media.