தமிழ்நாடு
தியேட்டரில் 50%, திருவிழாக்களுக்கு தடை: புதிய கட்டுப்பாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதை அடுத்து சற்றுமுன் தமிழக அரசு புதிய கட்டுப்பாடு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த எந்த கூட்டங்களுக்கு ஏப்ரல் 10ஆம் தேதி முதல் தடை என்றும் திரையரங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மேல் அனுமதி என்றும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் ஏப்ரல் 10 ஆம் தேதியிலிருந்து கோயம்பேட்டில் உள்ள சில்லரை வியாபாரத்தில் தடை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் வணிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்/ தமிழக அரசின் இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது














