Connect with us

வணிகம்

டிசிஎஸ் லாபம் 10% அதிகரிப்பு.. வருவாய் ரூ.55,300 கோடி ரூபாய்.. முதலீட்டாளர்களுக்கு டிவிடண்ட் அறிவிப்பு.. 2-ம் காலாண்டு முடிவுகள்!

Published

on

இந்தியாவின் மிகப் பெரிய ஐடி சேவைகள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) 2022-2023 நிதியாண்டும் 2-ம் காலாண்டு அறிக்கையைத் திங்கட்கிழமை வெளியிட்டது.

லாபம் அதிகரிப்பு

டிசிஎஸ் நிறுவனத்தின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு முடிவில் லாபம் 10,431 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டும் லாபம் 9,478 கோடி ரூபாய். இரண்டாம் காலாண்டில் லாபம் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

எதிர்பார்ப்பை மிஞ்சிய வருவாய்

டிசிஎஸ் நிறுவனத்தின் 2-ம் காலாண்டு வருவாய் 3 சதவீத வளர்ச்சி இருக்கும் என வல்லுநர்கள் கணித்து இருந்தனர். ஆனால் அது 4.8 சதவீதம் அதிகரித்து 55,309 கோடி வருவாய் பெற்றுள்ளதாக டிசிஎஸ் தெரிவித்துள்ளது.

தேவை வலுவாக உள்ளது

ஐடி சேவைகள் துறையின் தேவை வலுவாக உள்ளது என டிசிஎஸ் தனது காலாண்டு முடிவில் தெரிவித்துள்ளது. சென்ற காலாண்டில் இறுதியில் நிறுவனத்தின் ஆர்டர் புத்தக மதிப்பு 8.1 பில்லியன் டாலராக உள்ளது.

சிறந்த பிரிவுகள்

அதிகபட்சமாக கம்யூனிகேஷன்ஸ் பிரிவு சிறப்பாக 10 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீட்டுப் பிரிவு 6 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ரீடெயில் பிரிவு 5 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

சந்தை வாரியன செயல்திறன்

டிசிஎஸ் தனது பிராதான சந்தையான வட அமெரிக்கா (17.6%) மற்றும் ஐரோப்பிய (14.1) பகுதி வர்த்தகத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

ஊழியர்கள் எண்ணிக்கை

இரண்டாம் காலாண்டில் 20 ஆயிரம் ஃப்ரெஷர்களை டிசிஎஸ் பணிக்கு எடுத்துள்ளது. அதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது இது 33 சதவீதம் அதிகம். நடப்பு நிதியாண்டில் இதுவரையில் 35,000 நபர்களை பணிக்கு எடுத்துள்ளது. சென்ற ஆண்டு இதுவே 43,000 ஆக இருந்தது.

ஊழியர்கள் வெளியேறும் எண்ணிக்கை

டிசிஎஸ் நிறுவனத்திலிருந்து ஊழியர்கள் எண்ணிக்கை 21.5 சதவீதமாக உள்ளது.

டிசிஎஸ் டிவிடண்ட்

டிசிஎஸ் நிறுவனப் பங்குகளை வைத்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகப் பங்கு ஒன்றுக்கு 8 ரூபாய் டிவிடண்ட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்குகள்

டிசிஎஸ் நிறுவனத்துக்கு இது வலுவான காலாண்டு முடிவாக இருக்கும் என கணிக்கப்பட்டு இருந்ததை அடுத்து, சந்தை நேர முடிவில் பங்குகளின் விலை 1.93 சதவீதம் அதிகரித்து 3,124 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

வணிகம்4 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?