வணிகம்
டிசிஎஸ் ஊழியர்கள் பணி நீக்கம்: பங்குகளில் வீழ்ச்சி, தொழில்துறையில் அதிர்ச்சி!

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), தங்களது ஊழியர்களில் 2% பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவால் சுமார் 12,000 பேர் வரை வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது. பணி நீக்கம் செய்யப்பட உள்ளவர்கள் பெரும்பாலும் மூத்த நிர்வாகிகள் மற்றும் நடுத்தர நிலை ஊழியர்கள் என டிசிஎஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் பின்னணியில் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி க்ரித்திவாசன் அளித்த விளக்கத்தில், இந்த பணி நீக்கம் செயற்கை நுண்ணறிவு (AI) அல்லது செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக அல்ல என்றும், திறன் பொருத்தமின்மை மற்றும் மறுபயன்பாட்டு சவால்கள் காரணமாகவே இந்நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பங்குச் சந்தையில் டிசிஎஸ் பங்குகள் 1.27% வரை சரிவைக் கண்டுள்ளன. பங்கு தரகு நிறுவனங்கள், இந்த பணி நீக்கம் நிறுவனத்தின் உற்பத்தி திறன் சவால்கள் மற்றும் திறன்-தேவை பொருத்தமின்மை ஆகியவற்றின் விளைவாக இருக்கலாம் என்றும், இது குறுகிய காலத்தில் செயல்திறனில் சீர்குலைவை ஏற்படுத்தக்கூடும் என்றும், நீண்டகாலத்தில் வளர்ச்சி பாதிக்கப்படும் வாய்ப்பும் உண்டு என கூறியுள்ளன.








