சினிமா செய்திகள்
மறுபடியும் விவேகம் ரூட்டுக்கு மாறுகிறதா ஏகே 62? ஹீரோயின் அவங்கதானா?

அஜித்தின் ஏகே 62 படத்தின் அப்டேட் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என பிப்ரவரி மாதம் முழுவதையும் லைகா நிறுவனம் முழுங்கி விட்டது. இந்நிலையில், மார்ச் மாதம் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்னமும் எந்தவொரு அப்டேட் தொடர்பான அறிகுறியும் இல்லாமல் ஏகே 62 படக்குழு மயான அமைதியை ஏன் தான் கடைபிடிக்கிறதோ என அஜித் ரசிகர்கள் கடுப்பின் உச்சிக்கே சென்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
சமீபத்தில் லைகா நிறுவனம் சந்திரமுகி 2 படத்தின் அப்டேட்டை எல்லாம் வெளியிட்டு அஜித் ரசிகர்களை ரொம்பவே கடுப்பேற்றியது. இந்நிலையில், அஜித்தின் ஏகே 62 படத்தில் ஜோடியாக நடிக்க எந்த ஹீரோயினை மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப் போகிறார் என்கிற கேள்வி பெரிதாக கிளம்பி உள்ளது.

#image_title
ஏற்கனவே ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சாய் பல்லவி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது புதிய வரவாக நடிகை காஜல் அகர்வால் தான் அஜித்துக்கு ஜோடியாக ஏகே 62 படத்தில் நடிக்கப் போகிறார் என்கிற பேச்சு வைரலாகி வருகிறது.
லைகா தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடித்து வரும் நிலையில், ஏகே 62 படத்திலும் காஜல் அகர்வாலை புக் பண்ண பேச்சுவார்த்தைகள் அடிபட்டு வருவதாக கூறுகின்றனர்.
ஏற்கனவே காஜல் அகர்வால் அஜித்துடன் இணைந்து நடித்த விவேகம் படம் தான் ரசிகர்கள் கண் முன்னே வந்து போகிறது. விரைவில் ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வரும் என ரசிகர்கள் பொறுமையாக காத்திருக்கின்றனர்.