சினிமா செய்திகள்
சூர்யா பட இசையமைப்பாளர் திடீர் மரணம்: திரையுலகினர் இரங்கல்!

சூர்யா படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஒருவர் திடீரென காலமானதை அடுத்து திரையுலகினர் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
சூர்யா நடிப்பில் புஷ்பவாசகன் என்பவர் இயக்கியுள்ள திரைப்படம் ஸ்ரீ. கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் சுமாரான வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா ஜோடியாக ஸ்ருதிகா என்பவர் நடித்து இருந்த இந்த திரைப்படத்திற்கு டி.எஸ். முரளிதரன் என்பவர் இசையமைத்திருந்தார். இவர் இந்த படம் மட்டுமின்றி பாலிவுட்டில் ஒரு சில படங்களுக்கும் இவர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இசையமைப்பாளர் டி எஸ் முரளிதரன் திடீரென நேற்று இரவு காலமானார். இதனையடுத்து அவருக்கு சூர்யா உள்பட கோலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















