சினிமா
லியோ படத்தின் ஓடிடி உரிமம் மற்றும் ஆடியோ ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விற்பனையா?

தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் லியோ படத்தின் ஓடிடி உரிமம் பல கோடிகளுக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் ஆரம்பிக்கப்பட்ட லியோ படத்தின் படப்பிடிப்பு, ஊட்டி, காஷ்மீர் என சென்ற நிலையில், தற்போது மீண்டும் பிரசாத் லேப்பில் விஜய் வீடு போல செட் போட்டு எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

#image_title
சமீபத்தில், சென்னை திரும்பிய நடிகர் விஜய் நடிகர் அஜித் குமாரின் தந்தை மறைவை அறிந்ததும் உடனடியாக ஓடிப் போய் நேரிலேயே சந்தித்து விட்டு வந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், லியோ படத்தின் டப்பிங் உரிமம் மட்டுமே 75 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாகவும் நெட்பிளிக்ஸ் இந்த படத்தை உலகின் பல்வேறு மொழிகளில் டப் செய்து வெளியிட திட்டமிட்டே இத்தனை கோடி கொடுத்து வாங்கி இருப்பதாக கூறுகின்றனர்.

#image_title
மேலும், லியோ படத்தின் ஆடியோ ரைட்ஸ் அதிகபட்சமாக 20 கோடி ருபாய் வரை பிசினஸ் ஆகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அனிருத் இசையில் உருவாகி வரும் லியோ படத்தின் பாடல்கள் வேறலெவல் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.