சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே.20’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்: வைரல் புகைப்படங்கள்!

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் 20வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இந்த பூஜையின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன .
சிவகார்த்திகேயன் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் என்பவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் ’எஸ்கே 20’. இந்த படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சற்று முன்னர் ‘எஸ்.கே.20’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் காரைக்குடியில் தொடங்கியது. இந்த பூஜையில் சிவகார்த்திகேயன், இயக்குனர் அனுதீப், சத்யராஜ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இது குறித்த புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு இலண்டன், புதுவை, சென்னை, காரைக்குடி உள்பட பல பகுதிகளில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








