சினிமா செய்திகள்
சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் அட்டகாசமான டிரைலர்!

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
வித்தியாசமான கெட்டப்பில் சிம்புவின் தோற்றத்தைப் பார்க்கும் போதே சிம்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோசமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த படத்தில் முஸ்லிம் இளைஞர் கேரக்டரில் நடித்திருக்கும் சிம்பு அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என்பதும் கல்யாணி பிரியதர்ஷன் நடனம் ஆடும் ஸ்டைலே தனி என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்
மேலும் இந்த டிரைலரில் இருந்து முதலமைச்சரை கொலை செய்யப் போகிறார்கள் என்பதை தனது அபூர்வ சக்தி மூலம் முன்கூட்டியே தெரிந்துகொண்டு அவரை காப்பாற்ற சிம்பு எடுக்கும் முயற்சி, அந்த முயற்சிக்கு ஏற்படும் தடைகள், தடைகளை கடந்து அவர் செய்யும் சாதனை ஆகியவை தான் இந்த படத்தின் கதை என்று புரிய வருகிறது
முதலமைச்சராக எஸ்ஏ சந்திரசேகர் நடித்துள்ளார் என்பதும் இன்னொரு முக்கிய அரசியல்வாதியாக ஒய்ஜி மகேந்திரன் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்புவை அடுத்து அனைவர் மனதையும் கவர்பவர் எஸ்.ஜே.சூர்யா. காவல்துறை அதிகாரியாக தனது அசத்தலான பாணியில் வசனம் பேசி கலக்குவது படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி படத்தின் மிகப்பெரிய பிளஸ் ஆகும்.
மொத்தத்தில் மாநாடு திரைப்படம் சிம்புவுக்கு மட்டுமின்றி இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்குமே ஒரு திருப்புமுனையை கொடுக்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கும் இந்த படத்தில் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், மனோஜ், டேனியல், பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.