சினிமா
பிசாசு 2 படத்தின் ‘உச்சம்தலை ரேகையிலே’…மனதை மயக்கும் பாடல் வீடியோ

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கியுள்ள திரைப்படம் ‘பிசாசு 2’. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது.
ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் பூர்ணா, சந்தோஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். குறிப்பாக விஜய் சேதுபதி ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு கார்த்திக்ராஜா இசையமைத்து உள்ளார்.
ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என பஸ்ட் லுக் போஸ்டரிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது.
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘பிசாசு’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதுவரை எடுக்கப்பட்ட பேய் படங்களில் பிசாசு படத்தில் மட்டுமே பேயை நல்லவிதமாக காட்டப்பட்டதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் அட்டகாசமான டிரைலர்!
அந்தவகையில் ’பிசாசு 2’ படமும் அதன் தொடர்ச்சியாக இருக்குமா? அல்லது இது வேறு ஒரு வித்தியாசமான கதையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘உச்சம்தலை ரேகையிலே’ பாடல் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இப்படலை கபிலன் எழுத, சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.