சினிமா செய்திகள்
முதல் நாளிலேயே வசூல் சாதனை படைத்த சிம்புவின் பத்து தல!

‘பத்து தல’ படத்தின் முதல் நாள் வசூலை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்க கூடிய திரைப்படம் ‘பத்து தல’.

வியாழக்கிழமை இந்தப்படம் திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் முதல் நாள் வசூல் விவரத்தை தயாரித்தரப்பு அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், முதல் நாளிலேயே 12.3 கோடி ரூபாய் சிலம்பரசன் வசூல் செய்துள்ளதாக தயாரிப்புத் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுவரை நடிகர் சிலம்பரசனின் சினிமா பயணத்திலேயே இதுதான் சிறந்த ஓப்பனிங் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. இத்தனைக்கும் பட வெளியானது விடுமுறை நாளில் இல்லை, அதிகாலை 5 மணி காட்சிகள் இல்லை இருந்தபோதிலும் சிலம்பரசனின் ‘பத்து தல’ முதல் நாளிலேயே நல்ல வசூலை பெற்றுள்ளது என்று மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளது. இதனை ரசிகர்களும் கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.