சினிமா செய்திகள்
‘துரோகமும், துரோகியும் ஏஜிஆருக்கு புதுசா என்ன’ சிம்புவின் ‘பத்து தல’ ட்ரெய்லர்!

சிம்பு, கவுதம் கார்த்திக் நடிப்பில் நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்து வந்த பத்து தல படத்தின் ட்ரெய்லர் சனிக்கிழமை வெளியானது. 2.16 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த டிரெய்லரில் சிம்பு ஏஜிஆர் என்ற ஆண்டி ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கவுதம் கார்த்திக் ஒரு அண்டர் கிரவுட் காவலராக நடித்துள்ளார். கவுதம் வாசுதேவ் மேனன் முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரியா பவானி சங்கர், டீஜே அருணாசலம், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன்ஸ் மற்றும் பென் ஸ்டூடியோ நிறுவனங்கள் இந்த படத்தைத் தயாரித்துள்ளன.

pathuthala
2017-ம் ஆண்டு நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் கன்னட மொழியில் வெளியான முஃப்டி படத்தின் ரீமேக் தான் பத்து தல படம். இந்த படத்தை முதலில் முஃப்டியை இயக்கிய நாரதன் இயக்க இருந்தது. ஆனால் அது பல்வேறு காரணங்களுக்காக மாறி இப்போது சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய ஓபிலி கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியுள்ளார்.
மார்ச் 30-ம் தேதி ரிலீஸ் ஆன இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா மார்ச் 18-ம் தேதி நடைபெற்றது.