சினிமா செய்திகள்
‘பத்து தல’ படத்திற்குப் பிறகு நடக்கும் சிம்புவின் திருமணம்?

‘பத்து தல’ படத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு திருமணம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய ‘பத்து தல’ திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாக இருக்கிறது.
கடந்த வாரத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னையில் நடந்தது. மேலும், நேற்று இதன் பத்திரிக்கையாளர்கள் சென்னையில் கமலா திரையரங்கில் நடந்தது. இதில் நடிகர் சிம்பு, கெளதம் கார்த்திக், சாயிஷா, இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா எனப் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Simbu’s marriage after ‘Pathu Thala’?
இதில் பேசிய படத்தின் வசனகர்த்தா ராமகிருஷ்ணா, ”இயக்குநர் கிருஷ்ணாவிடம் எப்போதும் ஒரு செண்டிமெண்ட் உண்டு. அவர் வைத்து படம் செய்கிறவர்களுக்கு கண்டிப்பாக கல்யாணம் நடக்கும். ‘ஜில்லுனு ஒரு காதல்’ படத்திற்குப் பிறகு சூர்யா, ஜோதிகாவுக்கு, ‘நெடுஞ்சாலை’ படத்திற்குப் பிறகு ஆரி, ஷிவதா மற்றும் ‘பத்து தல’ படம் கமிட் ஆன பிறகு கெளதம் கார்த்திக்கு திருமணம் நடந்தது. அதுபோல, இந்தப் படம் வெளியான பிறகு சிம்புவுக்கும் அதுபோல விரைவில் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கலாம்” எனப் பேசியுள்ளார். இதைக் கேட்டு மேடையிலேயே சிம்பு சிரித்தார்.

Simbu in Pathu Thala Pressmeet
இதனால், அவர் சொன்னதுபோல விரைவில் அவருக்குத் திருமணம் நடக்க இருக்கிறதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


















