Connect with us

சினிமா செய்திகள்

‘சஷ்டிபூர்த்தி’யில் இசையமைப்பாளர் இளையராஜா!

Published

on

ilayaraja

MAA AAI புரோடக்ஷன்ஸ் LLP-ன் தயாரிப்பில் ‘சஷ்டிபூர்த்தி’ என்று பெயரிடப்பட்ட புது படம் இன்று காலை (மார்ச், 31) சென்னையில் இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு இந்த படத்தில் பணியாற்றும் அனைத்து கலைஞர்களும் வருகை தந்திருந்தார்கள். இசைஞானி இளையராஜா கேமராவை ஆன் செய்ய, சூப்பர் குட் பிலிம்ஸ்-ன் ஆர்.பி.சௌத்ரி கிளாப் போர்ட் அடிக்க முதல் காட்சி படமாக்கப்பட்டது.

இப்படத்தின் இயக்குநர் பவன் பிரபா. இப்படத்தை ரூபேஷ் குமார் சௌத்ரி தயாரித்து நடித்திருக்கிறார். ஆதியின் ‘கிளாப்’ படத்தில் அழகாக நடித்து எல்லோர் மனதையும் கவர்ந்த அக்கன்ஷா சிங் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ராஜேந்திர பிரசாத் மற்றும் அர்ச்சனா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் ’காந்தாரா’ திரைப்படத்தில் நடித்த அக்ஷயுத் குமார், Y.விஜயா, சுப லேகா சுதாகர் மற்றும் பல முன்னணி கலைஞர்கள் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் இடம்பெறும் நான்கு பாடல்களுக்கும் இசை ஞானி இளையராஜா இசை அமைக்கிறார். சஷ்டி பூர்த்தி ஒரு சிறந்த குடும்ப பொழுதுபோக்கான திரைப்படமாக இருக்கும். நாயகனும், நாயகியும் நாயகனுடைய பெற்றோரின் 60-ஆம் கல்யாணத்தை பிரமாண்டமாக நடத்த எண்ணுகிறார்கள். (நாயகனுடைய பெற்றோராக ராஜேந்திர பிரசாத் மற்றும் அர்ச்சனா நடிக்கிறார்கள்). அவர்களை சுற்றி நடக்கும் சுவாரசியமான கதை தான் சஷ்டி பூர்த்தி (சஷ்டிபூர்த்தி 60-ஆம் கல்யாணம்). இப்படம் சென்டிமென்ட் மற்றும் பொழுதுபோக்கு கலந்து வலம் வரும்.

இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கி ஒரே கட்டத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். இந்த வருடம் 2023 ஜூலை மாதமே இப்படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள்.

வணிகம்18 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?