சினிமா
பத்து மணிக்கு வரும் பத்து தல ட்ரெய்லர்!

சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல திரைப்படம் வரும் மார்ச் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில், அந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
சில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கிய இயக்குநர் ஒபெலி. என். கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் பத்து தல.

#image_title
கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான மஃப்டி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இந்த படத்தை ஒபெலி என். கிருஷ்ணா தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே வெளியான பத்து தல படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், பத்து தல ட்ரெய்லர் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் சிம்பு ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

#image_title
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் பாடல்கள் எல்லாம் வேறலெவலில் ஹிட் அடித்த நிலையில், பத்து தல பாடல்களும் மிகப்பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தவொரு அறிவிப்பு வெளியானாலும் கூட்டுத் தொகையாக நம்பர் 9 வந்த நிலையில், இந்த முறை பத்து தல படத்திற்காக பத்து என்பதை மனதில் கொண்டு இரவு பத்து மணிக்கு ட்ரெய்லரை வெளியிட உள்ளனர். ஆனால், மார்ச் 18 என இசை வெளியீட்டு விழாவில் மறக்காமல் நம்பர் 9ஐ வைத்திருக்கிறார் சிம்பு.