வீடியோ
எதிர்பார்ப்பை எகிறவைக்கும் சீதக்காதி டிரைலர்!
விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் சீதக்காதி படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி 19 மணி நேரத்தில் 22 லட்சம் பார்வையாளர்களை அள்ளி யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இந்த படத்தை இயக்கியுள்ளார் விஜய்சேதுபதி 80 வயது முதியவரான அய்யா எனும் கதாபாத்திரத்தில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்தில் விஜய்சேதுபதியுடன் நடிகைகள் காயத்ரி மற்றும் ரம்யா நம்பீசன் நடித்துள்ளனர்.
படத்தின் டிரைலரில் இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் ராம் சிறப்பு தோற்றத்தில் அவர்களாகவே நடித்துள்ளனர். 80 வயதில் படத்தில் நடிக்க மாட்டேன் என கூறும் ஒரு மகா நடிகனை வழக்கு போட்டு தயாரிப்பாளர்கள் தொல்லை கொடுக்கும் விதமாக டிரைலரே வித்தியாசமான கதையை சொல்கிறது.

ஒரு மனிதனை கொல்வது மட்டும் கொலையல்ல அவனது உணர்ச்சிகளை கொன்றாலும் அது கொலைதான் என ராம் பேசும் வசனமும், இறுதியில் நானே சரித்திரம் ஆனேன் என அக்பர் நாடகத்தில் 80வயது கிழவனாக விஜய்சேதுபதி பேசும் வசனமும் இது வேறு லெவல் படம் என்பதை உணர்த்துகிறது. டிசம்பர் 20ஆம் தேதி இப்படம் ரிலீசாகிறது.
இப்படத்தில் 8 நிமிடத்தில் சிங்கிள் டேக் காட்சி ஒன்றில் விஜய்சேதுபதி நடித்துள்ளதை அறிந்த சூர்யா ஆச்சர்யப்பட்டு விஜய்சேதுபதிக்கு ட்விட்டரில் வாழ்த்தும் சொல்லியுள்ளார்.


















