வீடியோ
அக்ஷய் குமாரின் 2.0 மேக்கிங் வீடியோ ரிலீஸ்!
லைகா தயாரிப்பில் இந்தியாவின் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள 2.0 திரைப்படம் வரும் நவம்பர் 29ம் தேதி ரிலீசாகிறது.
இந்நிலையில், படத்தை விளம்பரம் செய்யும் நோக்கில், ராட்சத பறவை மனிதனாக மேக்கப்பால் மாறும் அக்ஷய் குமாரின் வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ரஜினி, அக்ஷய், எமி ஜாக்சன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படத்தின் பல மேக்கிங் வீடியோக்கள் இதுவரை ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன.
2.0 படத்திற்காக அக்ஷய் குமார் போட்ட வேற லெவல் டெடிகேஷன் இந்த மேக்கிங் வீடியோவில் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அவரது கடின உழைப்பு மற்றும் ஷங்கரின் கனவை விரைவில் திரையில் ரசிகர்கள் பார்க்கப்போகின்றனர்.