Connect with us

சினிமா செய்திகள்

ஜவ்வாக இழுத்த சீதக்காதியின் இரண்டாம் பகுதி காட்சிகள் கட்!

Published

on

சீதகாதி, திரைப்படம், நீளம் குறைப்பு, Seethakaathi, Movie, Length Reduced

விஜய்சேதுபதியின் 25வது படமான சீதக்காதி கடந்த வாரம் வெளியானது. 2.50 நிமிடங்கள் என மிக நீண்ட திரைப்படமான இதன், இடைவேளைக்கு பின்னர் வரும் இரண்டாம் பகுதி காட்சிகளில் 23 நிமிடக் காட்சிகள் கத்தரிக்கப்பட்டுள்ளன.

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து கடந்த வாரம் வெள்ளிகிழமை அன்று வெளியான படம் சீதக்காதி. இந்த படத்தில் விஜய்சேதுபதி ஐயா ஆதிமூலம் எனும் நாடக கலைஞர் வேடத்தில் 75 வயது முதியவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படம் விஜய்சேதுபதியின் 25வது படமாக அமைந்துள்ளது.

இந்த படத்தில் நான் 40 நிமிடங்கள் தான் வருவேன் என விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெறிவித்திருந்தார். அதைபோலவே 40 நிமிடம் தான் அவர் திரையில் தோன்றினார்.

ஆனால், அதன் பின்னர் அவரது ஆன்மா தான் படத்தில் நடிக்கும் என கதை வித்தியசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. லாஜிக் இல்லாத இந்த கதையாலும் விஜய்சேதுபதி இல்லாத காட்சிகள் மிக நீளமாகவும் இருப்பதால், இரண்டாம் பாதியில் திரையரங்கில் உட்கார முடியவில்லை என ரசிகர்கள் புகார் அளித்தனர்.

இந்நிலையில், சீதக்காதி படத்தில் வரும் 23 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீளம் குறைக்கப்பட்ட பின்னராவது படத்தின் வசூல் சூடுபிடிக்குமா என படக்குழுவினர் எதிர்நோக்கியுள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Premium yacht charter & boat rental in turkey charteringa luxury yacht or rent a bare boat online easily with yachttogo's powerful booking system..