தமிழ்நாடு
ரஜினிக்கு அதை சொல்ல தகுதி இல்லை: சீமான் ஆவேசம்!

நடிகர் ரஜின்காந்த் அரசியலுக்கு வருவதை எதிர்ப்பதில் முக்கியமானவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதற்கு அவர் கூறும் காரணம் தமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும். ரஜினி தமிழர் அல்ல அவர் மராட்டியர் என விளாசுகிறார் சீமான்.
இந்நிலையில் நடிகர் ரஜினியின் 2.0 திரைப்படம் நாடுமுழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்தியா டுடே இதழுக்கு பேட்டியளித்துள்ளார் ரஜினி. சினிமா, அரசியல் என பல கேள்விகளுக்கு பதில் அளித்த ரஜினி, தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடம் உருவாகியிருப்பதாக தெரிவித்தார்.
ரஜினியின் இந்த கருத்துக்கு பதில் அளித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவர் இல்லை எனக் கூறும் தகுதி ரஜினிக்கு இல்லை. தன்னை வாழவைத்த தமிழ் மக்களை ரஜினிகாந்த் இழிவுபடுத்தியுள்ளார் என தெரிவித்துள்ளார்.



















