சினிமா செய்திகள்
சதீஷின் ‘நாய்சேகர்’ படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்!

பிரபல காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் ‘நாய்சேகர்’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் இணைந்து உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
‘நாய்சேகர்’ படத்திற்கு ஏற்கனவே பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவர் கம்போஸ் செய்த ’எடக்கு மடக்கு’ என்ற பாடலை சிவகார்த்திகேயன் எழுதி இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் மேலும் ஒரு பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடலை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் ஏஆர் முருகதாஸ் ஆகிய இருவரும் நாளை மாலை 5 மணிக்கு தங்களது டுவிட்டர் பக்கங்களில் வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தை கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
First Single #EdakkuModakku from #NaaiSekar will be released by Dir @ARMurugadoss & @vp_offl Tom 5 PM. A @anirudhofficial single @Siva_Kartikeyan lyrical@Ags_production @agscinemas @archanakalpathi @aishkalpathi @itspavitralaksh @KishoreRajkumar @venkat_manickam @SonyMusicSouth pic.twitter.com/n4MOVK4n4M
— Sathish (@actorsathish) December 10, 2021


















