சினிமா செய்திகள்
அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’: சமந்தாவின் ஐட்டம் டான்ஸ் வீடியோ!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே.
இந்த படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூபாய் 400 கோடி பட்ஜெட்டில் தமிழ் உள்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் அல்லு அர்ஜுன் திரையுலக வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிகை சமந்தா ‘புஷ்பா’ படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அந்த பாடலின் லிரிக் விடியோ சற்று முன் வெளியாகி உள்ளது.
இந்த பாடல் தற்போது இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.