சினிமா செய்திகள்
நடிகர் வடிவேலுவின் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’: அட்டகாசமான மோஷன் போஸ்டர்!

பிரபல நடிகர் வடிவேலு நடிக்கும் ’நாய்சேகர் ரிட்டன்ஸ்’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் சுராஜ் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.
10 ஆண்டுகளாக திரைப்படங்களில் அவ்வளவாக நடிக்காமல் இருந்த வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிக்கும் படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. வடிவேலு பாணியின் காமெடி காட்சிகள் அடங்கிய படமாக இந்தப் படம் இருக்கும் என்பது இந்த மோஷன் போஸ்டரில் இருந்து தெரியவருகிறது.
மேலும் இந்த படத்தில் வடிவேலு சில செல்ல நாய்க்குட்டிகளை வளர்க்கின்றார் என்பதும், அந்த நாய்க்குட்டிகளுக்கும் வடிவேலுக்கும் உள்ள பந்தம் தான் இந்த படத்தின் காமெடி கலந்த கதை என்றும் கூறப்பட்டது. இந்த மோஷன் போஸ்டரும் அதையே உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். வடிவேலு ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு முதன் முதலாக சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பதை அடுத்து அவர் தனது டுவிட்டரில் வடிவேலு அவர்களுடன் இணைந்து பணிபுரிவது தனக்கு பெருமையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.