சினிமா செய்திகள்
சரத்குமார்-ஐஸ்வர்யாராய் டூயட் பாடல் படப்பிடிப்பு: பொன்னியின் செல்வன் லேட்டஸ்ட் அப்டேட்!

’பொன்னியின் செல்வன்’ படத்திற்காக சரத்குமார் மற்றும் ஐஸ்வர்யாராய் டூயட் பாடல் காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது தகவல்கள் வெளிவந்துள்ளது.
பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் புதுச்சேரியில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் சரத்குமார், ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் புதுச்சேரி படப்பிடிப்பில் சரத்குமார் மற்றும் ஐஸ்வர்யாராய் டூயட் பாடல் காட்சி படமாக்கப்பட்டது என தகவல்கள் வெளிவந்துள்ளது. சரத்குமார் இந்த படத்தில் பெரிய பழுவேட்டரையர் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும், ஐஸ்வர்யா ராய், நந்தினி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.
இருவருக்குமிடையே காதல் ஏற்படும் வகையில் பொன்னியின் செல்வன் கதையில் உள்ளது என்பதை அடுத்து இருவருக்கும் இடையே இந்த பாடல் காட்சியை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏஆர் ரகுமான் இசையில் மெலடி பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளதாகவும் சரத்குமார் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் இந்த பாடலுக்கு மிக அற்புதமாக நடித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த பாடல் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாய் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவி, குந்தவை கேரக்டரில் திரிஷா, பூங்குழலி கேரக்டரில் ஐஸ்வர்யா லட்சுமி, சின்ன பழுவேட்டரையர் கேரக்டரில் பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முதல் பாகம் 2022 ஏப்ரலில் வெளியாகும் என்றும் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.













