சினிமா
”உலக அழகியை கட்டிப்பிடிக்கும் காட்சியை வைத்ததற்கு நன்றி”- நடிகர் சரத்குமார்!

சுபாஸ்கரன் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் – 2ம் பாகம் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்தப் படத்தில் பெரிய பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் சரத்குமார் பேசியபோது, “மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கிறோம் என்று சொன்னபோது. அவர் திட்டிவிடுவார் என்று நினைத்தேன். முதல் காட்சியே ஐஸ்வர்யா ராய் உடன் தான். எனக்கு காதல் என்றாலே வராது.
படத்தில் 6 பணி பெண்கள் எனது உடையை கழற்றுவார்கள். அதேபோல் வீட்டிலும் இருந்தாலும் நன்றாக இருக்கும் என்று நினைப்பேன். ஆனால், அதை படத்தில் வைத்ததற்கு நன்றி.
நான் காதல் செய்து இரண்டு முறை திருமணம் செய்தேன் என்னைப்பார்த்து ரொமேன்ஸ் வராதா என்று கேட்டார் மணிரத்னம். முதலில் காதல் திருமணம் இரண்டாவது காதல் திருமணம் என எனக்கு நடந்த இரண்டு திருமணங்களும் காதல் திருமணங்கள் தான். இன்றைக்கும் பலப்பேர் என்னை காதலிப்பதாக சொல்கிறார்கள்.
ஐஸ்வர்யாவின் கழுத்தை திருப்பும் பாக்கியம் எனக்கு மட்டுமே கிடைத்துள்ளது. உலக அழகியை கட்டிப்பிடிக்கும் காட்சியை எனக்காக வைத்ததற்கு மணிரத்னம் அவர்களுக்கு நன்றி. இதை கண்டு, படப்பிடிப்பு தளத்தில் பலரும் “நான் பெரும் பாக்கியசாலி” என்றனர். அதிலும் ரீடேக் எடுக்கும் காட்சியில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் என்னிடம் அவரின் வருத்தத்தையும் தெரிவித்தார்.
இந்த கதையை நீங்கள் 5 பாகங்களாக எடுத்து பெரிய பழுவேட்டரையர் அவர்களின் காதலை பற்றி சொல்ல வேண்டும். 64 விழுப்புண்கள் பெற்றதை போல் 64 பெண்களை காதலித்தாரா என்று நீங்கள் படம் எடுத்தால் நிச்சயம் அதில் நடிப்பதற்கு நான் தயாராக உள்ளேன். அதை ஸ்விட்சர்லாந்தில் எடுப்போம்” என்றார்.
















