இந்தியா
ஒரே மாதத்தில் ரூ.650 கோடியாக உயர்ந்த சொத்து மதிப்பு.. ரேகா ஜுன்ஜுன்வாலாவின் 2 பங்குகள் உச்சம்..!

இந்தியாவின் வாரன் பஃப்பெட் என்று அழைக்கப்படும் மறைந்த பிரபல பங்கு சந்தை நிபுணர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அவர்கள் வாங்கி வைத்த இரண்டு நிறுவனங்களின் பங்கு ஒரே மாதத்தில் மிகப்பெரிய அளவில் உயர்ந்த நிலையில் தற்போது அவருடைய மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலாவின் நிகர சொத்து மதிப்பு ரூபாய் 650 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஃபோர்ஸ் நிறுவனத்தின் பட்டியலின்படி தற்போது அவரது நிகர சொத்து மதிப்பு 5.9 பில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தை பின்னர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அவர்களின் மறைவு தொழில்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதும் இருப்பினும் அவர் வாங்கி வைத்த பங்குகள் தற்போது அவருடைய மனைவிக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் மறைந்த முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் அவர்கள் வாங்கிய காலணி விற்பனை நிறுவனமான மெட்ரோ பிராண்ட்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனமான ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் ஆகியவற்றின் பங்குகள் கடந்த ஒரு மாதத்தில் மிகப்பெரிய அளவில் உயர்ந்ததை அடுத்து ரேகா ஜுன்ஜுன்வாலாவின் நிகர சொத்து மதிப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு பங்குகள் உயர்ந்ததன் காரணமாக 2022 ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸின் பணக்கார பெண்களின் பட்டியலில் சாவித்ரி ஜிண்டால் மற்றும் வினோத் ராய் குப்தா ஆகியோருக்கு அடுத்தபடியாக ரேகா மூன்றாவது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு மாதத்தில் இந்த இரு நிறுவனங்களின் பங்கு விலையில் ஏற்பட்ட உயர்வு, ரேகா ஜுன்ஜுன்வாலாவை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாஇறந்த பிறகு, பங்குகள் அவரது மனைவி ரேகாவுக்கு மாற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு பங்குகளையும் பார்க்கும்போது, ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் பங்குகள் ரூ.530.95ல் இருந்து ரூ.578.05க்கு ஒரு பங்கின் விலை ரூ.47.10 உயர்ந்துள்ளது. இந்த அதிகரிப்பு கடந்த மாதத்தில் ரேகா ஜுன்ஜுன்வாலாவின் நிகர மதிப்பு ரூ.475 கோடியாக உயர்ந்தது.
இதேபோல், மெட்ரோ பிராண்டுகளின் பங்குகளும் கடந்த ஒரு மாதத்தில் ஒரு பங்கிற்கு ரூ.45.70 உயர்ந்துள்ளது. ரேகா ஜுன்ஜுன்வாலா 3,91,53,600 மெட்ரோ பிராண்டுகளின் பங்குகளை வைத்திருப்பதால், மெட்ரோ பிராண்டுகளின் பங்கு விலையில் ஏற்பட்ட உயர்வால் அவரது சொத்து மதிப்பு ரூ.179 கோடி உயர்ந்தது.
இதன் மூலம் ரேகா ஜுன்ஜுன்வாலாவின் மொத்த சொத்து மதிப்பு ஒரே மாதத்தில் ரூ.650 கோடியாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.