இந்தியா
பங்குச்சந்தையில் ரூ.54 கோடிக்கு மோசடி.. பிரபல நடிகர் மீது செபி அதிரடி நடவடிக்கை..!

பங்குச்சந்தையில் மோசடிகள் ஈடுபட்டு சுமார் 54 கோடி லாபம் பார்த்ததாக பிரபல நடிகர் அர்ஷத் வார்சி, அவரது மனைவி மரியா கோரெட்டி ஆகியோர் மீது செபி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் அர்ஷத் வார்சி மற்றும் அவரது மனைவி மரியா கோரெட்டி சகோதரர் இக்பால் ஹுசைன் வார்சி ஆகியோர் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தனக்கு சொந்தமான யூட்யூப் வீடியோ மூலம் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் உயரும் என்று முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்ததாகவும் இதன் மூலம் பல முதலீட்டாளர்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததன் காரணமாக நடிகர் அர்ஷத் வார்சிக்கு ஏராளமான லாபம் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் அர்ஷத் வார்சி, அவரது மனைவி மரியா கோடாட்டி சகோதரர் இக்பால் உசேன் ஆகிய மூவரும் யூடிப் வீடியோ மூலம் பண மோசடி செய்துள்ளதை செபி அமைப்பு கண்டுபிடித்து உள்ளதை அடுத்து மூவர் மீதும் அவர்களுக்கு துணையாக இருந்த மேலும் 44 பேர்கள் மீதும் செபி நடவடிக்கை எடுத்துள்ளது. தவறான வீடியோக்கள் மூலம் தவறான தகவல்களை முதலீட்டாளர்களுக்கு பரிந்துரை செய்ததாகவும் அர்ஷத் வர்சாவிடம் விசாரணை செய்த போது அவருக்கு பங்குச்சந்தை குறித்த எந்த விதமான புரிதலும் இல்லை என்றும் அவரது வீடியோவை நம்பி ஏராளமானோர் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பங்குகளை வாங்கி உள்ளதாகவும் செயற்கையாக அந்த பங்குகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் செபி கண்டுபிடித்துள்ளது.
இதனை அடுத்து நடிகர் அர்ஷத் வார்சி அவரது மனைவி உள்பட 45 பேர்கள் மீது செபி நடவடிக்கை எடுத்துள்ளது. யூடியூப் சேனல்களில் பதிவு செய்த வீடியோக்களின் மூலம் சுமார் 54 கோடி ரூபாய்க்கு சட்டவிரோதமாக நடிகர் அர்ஷத் வார்சி குழுவினர் மோசடி செய்துள்ளதை அடுத்து மறு உத்தரவு வரும் வரை எந்தவிதமான பங்குச்சந்தை நடவடிக்கைகளையும் பரிவர்த்தனை செய்வதையும் ஈடுபடக்கூடாது என நடிகர் அர்ஷத் வார்சி குழுவினர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடிகர் அர்ஷத் வார்சி வங்கி கணக்கில் உள்ள பணம் செபியின் அனுமதி இன்றி பயன்படுத்த கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.