இந்தியா
அம்பானி குடும்பத்தின் மருமகள் ராதிகாவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

முகேஷ் அம்பானி குடும்பத்தின் லேட்டஸ்ட் வரவான அவரது மருமகளின் சொத்து மதிப்பு மற்றும் அவரது ஆடம்பர செலவுகள் குறித்த தகவல் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியை ராதிகா மெர்சன்ட் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இவர்களது திருமணம் ராஜஸ்தானில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது என்பது தெரிந்தது.
ஆனந்த் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் கடந்து சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் இதனை அடுத்து பெற்றோர் சம்மதத்துடன் இந்த திருமணம் நடந்ததாகவும் கூறப்பட்டது. கிளாசிக்கல் நடன கலைஞரான ராதிகா வீர்ரேன் மெர்ச்சண்ட் மற்று, ஷைலா தம்பதியின் இரண்டாவது மகள் என்பது குறிப்பிடத்தக்கது. என்கோர் ஹெல்த் கவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் விர்ரேன் மெர்ஜென்ட் மகள் ராதிகா பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்று அதன் பிறகு நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மேல் படிப்பு படித்தார்.
இந்த நிலையில் ராதிகா மெர்சண்டின் நிகர சொத்து மதிப்பு 8 கோடி முதல் 10 கோடி வரை இருக்கும் என்றும் அவரது வருமானத்தின் பெரும் பகுதி அவரது குடும்ப வணிகமான என்கோர் ஹெல்த் கேர் மூலம் வருகிறது என்று கூறப்படுகிறது. மேலும் வீர்ரேன் மெர்சண்ட் நிகர சொத்து மதிப்பு 755 கோடி என்று சொல்லப்படும் நிலையில் இந்த பணம் முழுவதும் அவரது இரண்டு மகள்களான அஞ்சலி மற்றும் ராதிகா ஆகிய இருவருக்கும் சொந்தம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ராதிகா பங்காக ரூபாய் 400 கோடி வரை வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்தியாவின் நம்பர் ஒன் பணக்கார குடும்பத்தில் மருமகளாக இருக்கும் ராதிகா மெர்சன்ட் தனது தாய் வீட்டு சொத்தையும் சேர்த்தால் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராதிகா திருமணத்திற்கு முன்பே ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர் என்பதும் விலை உயர்ந்த பொருள்கள், பைகள், டிசைனர்கள், காலணிகள், உடைகள் ஆகியவை ஏராளமாக அவரிடம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.