இந்தியா
87 வயது நடிகருடன் ஸ்பைஸ் ஜெட் பணிப்பெண்கள்: கொதித்து எழுந்த பெண்கள் அமைப்பு!
Published
1 month agoon
By
Shiva
87 வயது பிரபல நடிகருடன் மூன்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டதை அடுத்து இந்த புகைப்படத்திற்கு அந்நிறுவனம் தனது டுவிட்டரில் கொடுத்திருந்த தலைப்பிற்கு பெண்கள் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல பாலிவுட் நடிகர் 87 வயது தர்மேந்திரா ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணம் செய்த போது அவருடன் ஸ்பைஸ்ஜெட் விமான பணிப்பெண்கள் மூன்று பேர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 3 பணிப்பெண்கள் உடனிருந்த இந்த புகைப்படத்தை பார்த்த தர்மேந்திரா ’எனது குழந்தைகளுடன் அழகான பயணம்’ என்று பயணம் செய்ய பதிவு செய்து இருந்தார். இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதே புகைப்படத்தை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘ரெட் ஹாட் ஹேர்ள்ஸ்’ என்று தலைப்பு வைத்துள்ளது. இந்த தலைப்பு தான் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது .இதுகுறித்து8 தேசிய மகளிர் ஆணையம் தனது ஆட்சேபனையை பதிவு செய்துள்ள நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா அவர்கள் ஸ்பைஸ்ஜெட் நிர்வாக இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார். உடனடியாக அந்த பதிவை அகற்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த பதிவில் ‘ரெட் ஹாட்’ என்ற வார்த்தைகள் பெண்களை இழிவு படுத்துவதாக இருக்கின்|றாது என்றும் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல டிவிட்டர் பயனாளிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இதுவரை அந்த தலைப்பை ஸ்பைஸ்ஜெட் நீக்க வில்லை என்று கூறப்படுகிறது.
https://twitter.com/flyspicejet/status/1604393719095885824