இந்தியா
நாடு தாண்டிய காதல்.. இந்திய கிராமத்தை சேர்ந்த பெண்ணை கரம் பிடித்த ஆஸ்திரேலியர்!

இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் இருக்கும் பெண்ணை ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
காதல் என்பது எங்கிருந்து எப்பொழுது வரும் என்று யாருக்கும் தெரியாது என்பதும் காதல் என்பது புனிதமானது என்றும் அது ஒரு சக்தி வாய்ந்தது என்றும் கூறப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு சிறு கிராமத்தை சேர்ந்தவர் தபஸ். இவரது தந்தை அந்த கிராமத்தில் சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடை வைத்திருக்கிறார் என்பதும் அவரது வருமானத்தில்தான் அந்த குடும்பமே வாழ்ந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தபஸ் சிறுவயதிலேயே நன்றாக படிக்கும் மாணவியாக இருந்ததை டுத்து அவருக்கு மத்திய பிரதேச மாநில அரசாங்கத்திடம் இருந்து உதவி தொகை கிடைத்தது. இந்த உதவி தொகையை வைத்து அவரை ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரத்திற்கு உயர்கல்வி படிக்க சென்றார்.
கடந்த 2016ஆம் ஆண்டு மேல் கல்வி படிக்கச் சென்ற தபஸ், ஆஸ்திரேலியாவில் உள்ள தனது சீனியர் மாணவர் ஹான்சைல்ட் என்பவரை சந்தித்தார். இருவரும் முதலில் நட்பாக பழகி அதன் பின் காதலிக்க தொடங்கினார். கடந்த 6 ஆண்டுகளாக அவர்கள் காதலித்த நிலையில் தற்போது கல்லூரி படிப்பை முடித்து நல்ல வேலையில் செட்டில் ஆன பின்னர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
திருமணத்திற்கு பெண் கேட்க ஹான்சைல்டு மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமத்திற்கு வந்து பெற்றோரிடம் முறையாக பெண் கேட்டார். இதனையடுத்து தபஸ் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருவருக்கும் தங்கள் கிராமத்திலேயே திருமணத்தை நடத்தி வைத்தனர். டிசம்பர் 18ஆம் தேதி இந்த திருமணம் நடைபெற்றது என்றும் இந்த திருமணத்தில் அந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டதற்கு ஹான்சைல்ட் இந்திய உணவு எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் குறிப்பாக ஜிலேபி எனது விருப்பத்திற்குரிய உணவு என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய உணவு நல்ல சுவையுள்ள உணவு என்றும் நான் மற்ற உணவுகளை விட இந்திய உணவை சாப்பிட முயற்சி செய்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.























