இந்தியா
இந்தியாவில் ஒமிக்ரான் BF.7 வைரஸ்: மீண்டும் லாக்டவுன், தடுப்பூசி கட்டுப்பாடுகளா?
Published
1 month agoon
By
Shiva
சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சகட்டத்தை அடைந்து கொண்டிருக்கும் நிலையில் அண்டை நாடான இந்தியாவிலும் மூன்று நபர்களுக்கு உண்மை ஒமிக்ரான் BF.7 வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒமிக்ரான் BF.7 வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்கள் குஜராத் மாநிலத்திலும் ஒருவரோடு ஒடிசாவிலும் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் இந்த இரு மாநிலங்களில் ஒமிக்ரான் BF.7 வைரஸ் தீவிரத்தன்மை இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா வர்கள் அவசர கூட்டத்தை கூடிய நிலையில் ஒமிக்ரான் BF.7 வைரஸ் என்பது கவலைக்குரிய விஷயம் அல்ல என்றும் ஆனால் அதே நேரத்தில் நாம் கண்காணிப்பு மற்றும் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் தற்போது மிக அதிகமாக ஒமிக்ரான் BF.7 வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவின் நிலையை மதிப்பிடுவதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முழுமையாக முடியவில்லை என்பதை கருத்தில் கொண்டு அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கண்காணிப்பை மாநில அரசுகள் அதிகப்படுத்த வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இதுவரை கோவிட் தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி கொள்ளும்படியும் அவர் கேட்டுக்கொண்டார். இதுவரை இந்தியாவில் கிட்டத்தட்ட அனைவருக்கும் இரண்டு டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பதும் ஒரு சிலருக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இனியும் ஒரு டோஸ் செலுத்த வேண்டுமா என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ஆரம்ப நிலையிலேயே ஒமிக்ரான் BF.7 வைரஸ் பரவலை கண்டுபிடித்து கட்டுப்படுத்தினால் மட்டுமே இந்தியாவில் இன்னொரு கொரோனா வைரஸ் அலை ஏற்படாமல் தடுக்க முடியும் என்றும் இதில் நாம் கவனக்குறைவாக இருந்தால் மீண்டும் லாக்டோன், மாஸ்க், தடுப்பூசி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிவரும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
You may like
-
மீண்டும் இந்தியாவில் ‘வொர்க் ப்ரம் ஹோம்? முன்னணி இந்திய ஐடி நிறுவனங்கள் திட்டம்!
-
மறுபடியும் முதல்ல இருந்தா? கோவிட் விதிமுறைகளை அமல்படுத்திய கர்நாடகா அரசு: முழு விபரங்கள்!
-
இந்தியாவில் கொரோனா 4வது அலை.. மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்?
-
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு? சென்னையில் மட்டும் இவ்வளவா?
-
2000க்கும் அதிகமானது தமிழக கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் இவ்வளவா?
-
சென்னையில் 600ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் எவ்வளவு?