Connect with us

சினிமா

வாரிசு படத்தில் நடிக்க இத்தனை கோடி சம்பளமா ராஷ்மிகாவுக்கு; நேஷ்னல் கிரஷ்னா சும்மாவா!

Published

on

தளபதி விஜய்யின் வாரிசு படத்தில் நடிக்க நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகாவுக்கு எத்தனை கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது என்கிற தகவல் வெளியாகி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

கன்னட நடிகையாக இருந்த ராஷ்மிகா மந்தனா இப்போ பான் இந்தியா நடிகையாக மாறிவிட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

அல்லு அர்ஜுன் உடன் இணைந்து புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளியாக நடித்த ராஷ்மிகாவுக்கு பாலிவுட்டிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு துல்கர் சல்மானின் சீதாராமம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருந்தார் ராஷ்மிகா மந்தனா.

வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள தளபதி விஜய்யின் வாரிசு படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு 4 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புஷ்பா படத்துக்கு ராஷ்மிகா மந்தனா வெறும் 2 கோடி ரூபாய் தான் சம்பளம் வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், அதற்குள் அவரது வளர்ச்சி இந்திய சினிமாவில் பெரிய அளவில் அவரது மார்க்கெட்டை உயர்த்தி உள்ளது.

கார்த்தி உடன் தமிழில் ராஷ்மிகா மந்தனா அறிமுகமான சுல்தான் படத்தில் ஒரு கோடிக்கும் குறைவாக 80 லட்சம் தான் சம்பளம் வாங்கினார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

பாலிவுட்டில் கடந்த ஆண்டு அமிதாப் பச்சன் உடன் இணைந்து நடித்த ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக அனிமல் எனும் இந்தி படத்தில் நடித்து வருகிறார். உடல் நலக் குறைவு காரணமாக சமந்தா பாலிவுட்டில் விட்ட கேப்பை தற்போது ராஷ்மிகா மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் தான் நிரப்பி வருகின்றனர் என கூறப்படுகிறது.

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடல் 125 மில்லியன் வியூஸ் கடந்து டிரெண்டான நிலையில், ராஷ்மிகாவை பலரும் ரஞ்சிதமே என்று தான் அழைத்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
me profile.