சினிமா
தாய்லாந்தில் தாராளம் காட்டிய கீர்த்தி சுரேஷ்; டாப் ஹீரோக்களுடன் மீண்டும் ஜோடி சேர திட்டமா!
Published
3 weeks agoon
By
Saranya
இதுவரை இல்லாத அளவுக்கு முதன்முறையாக நீச்சல் குளத்தில் பிகினி உடையில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
ரஜினி முருகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து சிவகார்த்திகேயன் உடன் ரெமோ, சீமராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
தனுஷ் உடன் தொடரி படத்தில் நடிக்க ஆரம்பித்த கீர்த்தி சுரேஷுக்கு அவர் நடிப்பில் அடுத்து அடுத்து வெளியான தமிழ் படங்கள் ஃப்ளாப் ஆக தொடங்கின. சியான் விக்ரம் உடன் கீர்த்தி சுரேஷ் நடித்த சாமி ஸ்கொயர், விஷால் உடன் கீர்த்தி சுரேஷ் நடித்த சண்டைக்கோழி, விஜய்யுடன் அவர் ஜோடி போட்டு நடித்த பைரவா உள்ளிட்ட படங்கள் படு தோல்வியை சந்தித்தன.
தெலுங்கில் கடைசியாக மகாநடி (நடிகையர் திலகம்) படம் கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது. அந்த படத்திற்கு பிறகு உமன் சென்ட்ரிக் படங்களில் அதிகம் கவனம் செலுத்த ஆரம்பித்தார் கீர்த்தி சுரேஷ்.
பெண்குயின், மிஸ் இந்தியா, ரங் தே, குட் லக் சகி, சாணிக் காயிதம் உள்ளிட்ட பல படங்கள் தொடர்ந்து வெற்றி பெறாமல் சறுக்கின. நடிகர் ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த படத்தில் தங்கையாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ் அந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. மோகன்லாலின் மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் படமும் கீர்த்தி சுரேஷுக்கு மைலேஜ் தரவில்லை.
இந்நிலையில், மீண்டும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட வேண்டும் என நினைத்த கீர்த்தி சுரேஷ் கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி போட்டோஷூட்களை நடத்தி வந்தார்.
அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு தாய்லாந்தில் தற்போது நீச்சல் குளத்தில் பிகினி உடையில் குளிக்கும் போட்டோவையே போட்டு இணையத்தின் கவனத்தை ஒட்டுமொத்தமாக தன் பக்கம் திருப்பி உள்ளார். சினிமாவிலும் கவர்ச்சி நடிகையாக மாறுவதற்கான சிக்னலா இது என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
You may like
-
என்ன திடீர்னு அந்த பிக் பாஸ் பிரபலம் இவ்ளோ பெரிய டிரெஸ் போட்டுருக்காரே; கலாய்க்கும் ரசிகர்கள்!
-
ஐஸ்வர்யா ராய் இல்லையாம்.. இந்த நடிகை தான் அஜித்துக்கு ஏகே 62 படத்தில் ஜோடியாம்?
-
சக்கர பொங்கல்.. வெண் பொங்கலுக்கு நடுவே கரும்பா நிக்கிறாரே.. விஜய் அட்மின் விட்டா ஹீரோவாகிடுவாரு போல!
-
உடம்பு முடியாத நிலையிலும் கீர்த்தி சுரேஷுக்கு இப்படியொரு உதவி செய்த சமந்தா? நடிகையர் திலகம் நட்பு!
-
ஆட்டநாயகன் விஜய் சதம் அடித்தாரா? சறுக்கினாரா? எப்படி இருக்கு வாரிசு திரைப்படம்!
-
எனக்கு இதை தவிர வேற தெரியாது பாஸ்; மீண்டும் கவர்ச்சியில் குதித்த தர்ஷா குப்தா!