சினிமா
‘தலைவி’ படம் பார்த்த ரஜினிகாந்த் – என்ன செய்தார் தெரியுமா?…

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான திரைப்படம் தலைவி. இப்படத்தை இயக்குனர் ஏல்.எ.விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும், எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிகர் அரவிந்த சாமியும், ஏ.எம்.வீரப்பன் வேடத்தில் சமுத்திரக்கனியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் தலைவி திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது. மேலும், ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசையையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தை நடிகர் ரஜினி பார்த்துள்ளார். அவருக்காக ஒரு தனி சிறப்பான காட்சியை படக்குழு திரையிட்டது. படத்தை பார்த்த ரஜினி உடனடியாக தொலைப்பேசியில் ‘தலைவி’ படத்தின் இயக்குனர் விஜயை அழைத்து படம் சிறப்பாக உருவாக்கப்பட்டிருப்பதாக பாராட்டினாராம். மேலும், கங்கனா ரனாவத், அர்விந்த் சாமி மற்றும் சமுத்திரக்கனி ஆகியோரின் நடிப்பை பாராட்டியதோடு அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை கூறுமாறும் கூறினாராம்.
ரஜினியின் இந்த பாராட்டு தலைவி படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.






