சினிமா
’தலைவி’ தோல்வி எதிரொலி: கங்கனாவிடம் ரூ.6 கோடியை திருப்பி கேட்ட தயாரிப்பாளர்..!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்த ’தலைவி’ என்ற திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தினால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த படத்தை வெளியிட்ட ஜி ஸ்டூடியோ நிறுவனம் ஆறு கோடியை கங்கனா ரனாவத் அவர்களிடம் திருப்பி கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி நடிப்பில் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’தலைவி’. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான இந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் தயாரான நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை ஜி ஸ்டுடியோநிறுவனம் பெற்று இருந்தது.
இந்த நிலையில் இந்த படம் தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை திருப்பி தருமாறு ஜி ஸ்டுடியோ கங்கனா ரனாவத் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் இது குறித்து பஞ்சாயத்து திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதல் கட்டமாக நஷ்ட ஈடு பணத்தை தயாரிப்பாளரிடம் திருப்பி கேட்டதாகவும் ஆனால் தயாரிப்பாளர் கொடுக்கும் நிலையில் இல்லை என்பதால் கங்கனா ரனாவத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் ஜி ஸ்டுடியோ தெரிவித்துள்ளது. ஆனால் இது குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ள கங்கனா ரனாவத், ‘இது சினிமா மாபியாவின் போய் பிரச்சாரம் என்றும் தலைவி திரைப்படத்தின் தயாரிப்புக்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
’தலைவி ரிலீசுக்கு முன்பே நான் என்னுடைய முந்தைய படமான எமர்ஜென்சி படத்தின் அனைத்து பிரச்சினையும் முடித்து விட்டேன் என்றும் தலைவி வெளியாகி இரண்டு வருடங்கள் கழித்து ஒரு பொய்யான செய்தி பரப்பப்படுகிறது என்றும் என் மீது அன்பு கொண்டவர்கள் இந்த செய்தியை புறக்கணிக்கவும் என்றும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ஹிந்தி திரை உலக தயாரிப்பாளர் சங்கத்தில் இது குறித்து பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜி ஸ்டுடியோ நிறுவனத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தை கங்கனா ரனாவத் திருப்பி தருவாரா? அல்லது பஞ்சாயத்து தொடருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.