தமிழ்நாடு
ரஜினி மகள் வீட்டில் கொள்ளை: 20 பவுன் நகையுடன் சிக்கிய பணிப்பெண்!

பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் வைரம், தங்கம் நகைகளை காணவில்லை என அவர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் நேற்று புகார் அளித்தார். இதில் அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஒருவர் 20 பவுன் நகையுடன் சிக்கியுள்ளார்.

#image_title
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் லாக்கரில் இருந்த பல லட்சம் மதிப்பிலான 60 சவரன் தங்கம் மற்றும் வைரம் நகைகளை காணவில்லை என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். ஐஸ்வர்யா தனது புகாரில் வீட்டில் வேலைசெய்யும் பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
தனது தங்கையின் திருமணத்தின் போது அந்த நகைகளை பயன்படுத்திவிட்டு பின்னர் லாக்கரில் வைத்திருந்ததாகவும் ஆனால் தற்போது அந்த நகைகள் மாயமாகயுள்ளதாகவும் குறிப்பிட்ட ஐஸ்வர்யாவின் புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது வீட்டில் பணிபுரியும் பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா வீட்டில் பணிபுரிந்த பெண் நகையை திருடியதாக கண்டுபிடித்துள்ளார்கள். அவரிடமிருந்து 20 பவுன் தங்கநகைகள் மீட்ட காவல்துறை மேலும் நகைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. விரைவில் சிக்கிய பணிப்பெண் பற்றியும் நகைகள் பற்றியும் முழுவிவரம் தெரிவிக்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.