தமிழ்நாடு
திமுகவினர் விளங்குவார்களா? மானமும், ரோசமும் இருந்திருந்தால் திமுக அரசியலை விட்டு விலகி இருக்கும்: செல்லூர் ராஜூ காட்டம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திமுகவிற்கு சாபமிட்டு பேசியுள்ளார்.

#image_title
அப்போது பேசிய செல்லூர் ராஜூ, இலவச மடிக்கணினி திட்டத்தை நிறுத்திய திமுக விளங்குவார்களா? அதிமுகவின் எல்லா திட்டங்களுக்கும் திமுக மூடுவிழா நடத்துகிறார்கள். ஜூபூம்பா என பெட்டியை வைத்து லட்சக்கணக்கில் மனுக்களை வாங்கிவிட்டு பிரச்சனையை தீர்த்துவிட்டோம் என சொல்கிறார் ஸ்டாலின். என்ன பிரச்சனையை தீர்த்தார்.
எழுதாத பேனாவுக்கு 82 கோடி செலவழிக்க பார்க்கிறார் ஸ்டாலின். இப்போது 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கும் ஆபத்து வந்துவிட்டது. விஞ்ஞான ரீதியில் மக்களை ஏமாற்ற திமுக சிறப்பாக சிந்திக்கிறார்கள். இதற்காகவே திமுகவுக்கு நோபல்பரிசு கொடுக்கலாம்.
இந்தியாவில் மிகப்பெரிய சிறையில் கனிமொழியையும், ராஜாவையும் அடைத்த போது மானமும், ரோசமும் இருந்திருந்தால் திமுக அரசியலை விட்டு அன்றே விலகி இருக்க வேண்டும். தற்போது இந்திய நாட்டிற்கே தலைமை ஏற்க வேண்டும் ஸ்டாலின் என்ற நாடகத்தை நடத்தி வருகின்றனர் என செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்தார்.