சினிமா செய்திகள்
உதயநிதியை சந்தித்த அஜித் பட தயாரிப்பாளர்: என்ன காரணம்?

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் தயாரிப்பாளர் போனிகபூர் இன்று நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தல அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’வலிமை’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும், இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் போனிகபூர் இன்று சென்னை வந்த நிலையில் அவர் நடிகரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது ராகுல் என்பவரும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்படுகிறது.
மேலும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்ஹ்டில் ஒரு திரைப்படம் தயாராகி வருகிறது என்பதும், இந்த படத்திற்கு ’நெஞ்சுக்கு நீதி’ என்ற டைட்டில் சமீபத்தில் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் சம்பந்தமாக உதயநிதி மற்றும் போனிகபூர் ஆலோசனை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.