தமிழ்நாடு
முதல்வர் ஸ்டாலின் சிறந்த லெக் ஸ்பின் பௌலர்: சட்டசபையில் உதயநிதி பகிர்ந்த மலரும் நினைவுகள்!

தமிழக சட்டசபையில் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுகவை கிரிக்கெட் அணியாக வர்ணித்து பேசியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தினார். மேலும் தனது சிறு வயது சில அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

#image_title
விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் தனது துறையின் மானியக்கோரிக்கை விவாதத்தில் நன்றி தெரிவித்து பேசிய போது தனது சிறு வயது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது, நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கோபாலபுரம், சிறுவயதில் நான், தற்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எல்லாம் ரோட்டில் கிரிக்கெட் விளையாடுவோம்.
கலைஞரோடு நான் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். கலைஞர் பந்து போடுவார், பேட்டிங் செய்துவிட்டு சென்றுவிடுவார். மேலும் தற்போதைய நம் முதல்வருடனும் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். அவர் மிகச் சிறந்த லெக் ஸ்பின் பெளலர். அவர் பந்து வீசினால் யாராலும் விளையாட முடியாது. இங்கு எப்படி சிக்ஸர் அடிக்கிறாரோ அப்படியேதான் பௌலிங்கிலும் என பேசினார்.