சினிமா செய்திகள்
பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ அட்டகாசமான டீசர்!

எஸ் எஸ் ராஜமவுலி இயக்கிய ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய படங்களின் மூலம் பிரபலமான நடிகர் பிரபாஸ் நடித்து முடித்துள்ள திரைப்படங்களில் ஒன்று ’ராதே ஷ்யாம்’, ந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று பிரபாஸ் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருதாக ’ராதே ஷ்யாம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரில் அட்டகாசமாக மற்றும் இந்திய திரையுலகில் இதுவரை காணாத காட்சிகள் இருப்பதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் டீசரில் இணைக்கப்பட்டுள்ள வசனம் பின்வருமாறு:
நீ யாருன்னு எனக்கு தெரியும்
ஆனால் உன்னிடம் நான் சொல்ல மாட்டேன்
உன் இதயம் உடைந்த சத்தம் எனக்கு கேட்கும்
ஆனால் உன்னிடம் நான் சொல்ல மாட்டேன்
உன் தோல்வியை என்னால் பார்க்க முடியும்
ஆனால் உன்னிடம் நான் சொல்ல மாட்டேன்
உன் மரணத்தின் வாசனையை என்னால் நுகர முடியும்
ஆனால் உன்னிடம் நான் சொல்ல மாட்டேன்
எல்லாம் எனக்கு தெரியும்
ஆனாலும் சொல்ல மாட்டேன்
ஏனென்றால் என்னை உன்னால் புரிந்துகொள்ள முடியாது
என் பேரு விக்கிரமாதித்தா
நான் கடவுளும் இல்லை
உன்னை மாதிரியும் இல்லை
பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது என்பது குறிபிடத்தக்கது.