சினிமா செய்திகள்
வேட்டி சட்டையில் சென்று பத்ம விருது வாங்கிய பிரபுதேவா!

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் அழைக்கப்படும் பிரபுதேவாவுக்கு நேற்று நடந்த பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம ஸ்ரீ விருதினை வழங்கி கெளரவப்படுத்தினார்.

பிரபுதேவாவின் திறமைக்கு பத்மஸ்ரீ விருது இப்போதுதான் கிடைப்பது என்பது சிறிது வருத்தத்தை கொடுத்தாலும், இப்போதாவது அவரது திறமையை அரசு அங்கீகரித்ததே என எண்ண வைத்துள்ளது.
டில்லியில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு உள்ளிட்ட தலைவர்களின் தலைமையில் நடைபெற்ற பத்ம விருது விழாவில், பத்மஸ்ரீ விருதினை வாங்க வந்த பிரபுதேவா, வேட்டி சட்டை அணிந்து கெத்தாக விருதினை வாங்கினார்.
நான்கு முறை தேசிய விருது வாங்கிய நடிகர் மோகன் லாலுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. மேலும், டிரம்ஸ் சிவமணி, பாடகர் சங்கர் மகா தேவன் உள்ளிட்ட 112 பேருக்கு ஜனாதிபதி பத்ம விருதுகளை வழங்கி கெளவரப்படுத்தினார்.



















