சினிமா
காதலித்து ஏமாற்றும் பெண்களை கொடூரமாக கொல்லும் பஹீரா.. படம் எப்படி இருக்கு?

இளைஞர்களை உண்மையாக காதலிப்பது போல ஏமாற்றும் சில பெண்களை தேடிச் சென்று ஒரு டெடி பியர் கொலை செய்கிறது. இது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் 4 ஹீரோயின்களை காதலித்து திருமணம் செய்து டார்ச்சர் செய்கிறார் பிரபு தேவா. ஹீரோயின்களை மட்டுமில்லை படம் பார்க்க சென்ற ஆடியன்ஸையும் தான்.
நடிக்கிறேன் என்கிற பெயரில் காஞ்சனா லாரன்ஸை பல இடங்களில் காப்பியடித்து இருக்கிறார்.
திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிட்டு பட டைரக்டர் என்றே பெயர் வாங்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகி உள்ள இன்னொரு ஏ சர்டிபிகேட் படம் தான் இந்த பஹீரா.

#image_title
இதில், நல்ல விஷயம் என்னவென்றால், தான் இயக்கும் படங்கள் எல்லாம் படுதோல்வியை சந்தித்து வரும் நிலையில், இனிமேல் ஏ சர்டிபிகேட் படத்தையே இயக்க மாட்டேன் என்றும் இதுதான் என் கடைசி ஏ சர்டிபிகேட் படம் என்றும் சத்தியம் செய்திருக்கிறார்.
இந்த படத்தை பார்த்து விட்டு அடுத்ததாக விஷாலின் மார்க் ஆண்டனி படத்துக்கும் ரசிகர்கள் வரலைன்னா என்ன பண்றது என்கிற பயமாக இருக்கலாம் என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
ரொம்பவே சுமாரான சைக்கோ த்ரில்லர் படத்துக்கு பிரபு தேவாவை படாத பாடு படுத்தி பல கெட்டப்புகளை போட வைத்து காமெடி செய்து இருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.

#image_title
ஒன்னுக்கு 7 ஹீரோயின்களை வைத்து இயக்கினால் ரசிகர்கள் அப்படியே ஜொள்ளு விட்டுக் கொண்டு தியேட்டரை நோக்கி வந்து விடுவார்கள் என போட்ட கணக்கு ஃபெயில் ஆகிப் போனது தான் மிச்சம்.
அநேகன் படத்தில் நடித்த அமைரா தஸ்தூர் தான் கொஞ்சம் தாராளமாக உள்ளாடை காட்சிகளில் நடித்து 18 பிளஸ் படம் என நம்பிப் போன ரசிகர்களுக்கு சற்றே தீனிப் போட்டு இருக்கிறார். மற்றபடி படத்தில் பெரிதாக ஒரு பிட்டும் இல்லை என்பதும் அந்த வகையறா ரசிகர்களையும் புலம்ப வைத்திருக்கிறது.
தொடர்ந்து படங்கள் மொக்கையானாலும், மனம் தளராமல் நடித்து வரும் பிரபுதேவாவின் தீவிர ரசிகராக இருந்தால், பல்லைக் கடித்துக் கொண்டு இந்த பஹீராவை ஒரு முறை பார்க்கலாம்!
ரேட்டிங்: 2/5.