சினிமா
சைக்கோவாக மிரட்டும் பிரபுதேவா – அதிர வைக்கும் ‘பஹீரா’ பட டிரெய்லர்

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும், நடன நடிகராகவும் அறிமுகமானவர் பிரபுதேவா. துவக்கத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி புகழ் பெற்ற பிரபுதேவா பின்னர் காதலன் படம் மூலம் நடிகராக மாறினார். அதன்பின் பல படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பதோடு மட்டுமில்லாமல் பட படங்களுக்கு நடனமும் அமைத்தார். ஒருபக்கம் இயக்குனராகவும் மாறி அசத்தினார். தமிழில் போக்கிரி, வில்லு உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். அதோடு, பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து சில படங்களை கொடுத்துள்ளார்.
தற்போது தமிழில் தொடர்ந்து நடிக்க துவங்கியுள்ளார். அவரின் கைவசம் நான்கைந்து படங்கள் இருக்கிறது. அதில் ஒன்றுதான் பஹீரா. இப்படத்தை ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
ஒரு பெண்ணால் பாதிக்கப்பட்டவன் பல பெண்களின் வாழ்க்கையை சீரழிப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அமைரா தஸ்தூர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் பிரபுதேவா பல கெட்டப்புகளில் நடித்து அசத்தியுள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.