Connect with us

சினிமா செய்திகள்

படப்பிடிப்பு தளத்திலும் ’ஜாலியோ ஜிம்கானாதான்: வைரலாகும் பூஜா ஹெக்டே ட்வீட்!

Published

on

தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கூடிய படமாக இந்த படம் கருதப்படுகிறது .

இந்த படத்தின் புரமோஷன் பணிகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் செய்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் படத்தின் நாயகியான பூஜா அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பீஸ்ட் படம் குறித்த தகவல்களை குறிப்பிட்டு வருகிறார். அந்த வகையில் ’ஜாலியோ ஜிம்கானா’ பாடலின் போது எடுத்த புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டரில் வெளியிட்டு படப்பிடிப்பு தளத்திலும் ஜாலியாக தான் இருந்தோம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தில் விஜய், பூஜ ஹெக்டே, நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோர் ஜாலியாக இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியாகவிருக்கும் இந்தப் படம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்யும் என்றும் விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களின் பட்டியலில் இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
dr68 seo power :.