சினிமா செய்திகள்
‘பொன்னியன் செல்வன்’ ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து ஐஸ்வர்யா ராய் ஸ்டில்ஸ்

இயக்குநர் மணிரத்னம் டைரக்ஷனில் மிகப் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகிக் கொண்டிருக்கிறது ‘பொன்னியன் செல்வன்’ திரைப்படம்.
கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய நாவலின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் மிக முக்கிய ரோலான வல்லவரையன் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் கார்த்தி நடிக்கிறார். அதேபோல ஐஸ்வர்யா ராய், நந்தினி என்னும் ரோலில் நடிக்கிறார்.
View this post on Instagram
மேலும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், அமிதாப் பச்சன், சரத் குமார், லால், ஐஸ்வர்யா லட்சுமி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்களும் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். ஓராண்டுக்கு மேல் நடந்து வரும் ஷூட்டிங் மூலம் படத்தின் முதல் பாகம் முடிவுக்கு வரப் போவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
விரைவில் வெள்ளித் திரை விருந்தாக பொன்னியன் செல்வன் ரிலீஸாக உள்ளதாம். இந்நிலையில் ஐஸ்வர்யா ராயுடன், நடிகர் ராகவன் முருகன் எடுத்துக் கொண்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
வெகு நாட்களுக்குப் பின்னர் ஐஸ்வர்யா ராய், திரைப்படத்தில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.















