உலகம்
உளவு வேலைக்கு பயன்படுத்தப்பட்ட நடிகைகள்: முன்னாள் ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்!
Published
4 weeks agoon
By
Shiva
பிரபல நடிகைகள் உளவு வேலைக்கு பயன்படுத்தப்பட்டதாக முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி அதில் ராஜா என்பவர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பித்தக்கது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்து ஷெரீப் ஆட்சி தொடங்கியவுடன் அதில் ராஜா திடீரென பாகிஸ்தானில் இருந்து காணாமல் போனார். ஷெரிப் அரசு அவரை தேடும் பணியில் இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி முன்னாள் ராணுவ அதிகாரி அதில் ராஜா இங்கிலாந்தில் உள்ள தனது குடும்பத்துடன் சேர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து கொண்டே அவர் ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் பிரபல நடிகைகள் உளவு வேலைக்கு பயன்படுத்தப்பட்டதாக முன்னாள் ராணுவ அதிகாரி அதில் ராஜா தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார். பாகிஸ்தான் உளவு அமைப்பு நடிகர் நடிகைகள் மற்றும் மாடல்களை உளவுக்கு பயன்படுத்தியதாக அவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் பிரபல நடிகர் நடிகைகளை எதிரி நாட்டிற்கு அனுப்பி உளவு பார்த்ததாக அவர் தெரிவித்துள்ளார். அவர் எந்தெந்த நடிகர் நடிகைகள் உளவு பார்த்தார்கள் என்று பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் அந்த நடிகர் நடிகைகளின் முதல் எழுத்தை மட்டும் குறிப்பிட்டு உள்ளதை அடுத்து ஒரு சில பெயர்களை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக சஜல் அலி என்ற நடிகை பாகிஸ்தான் அரசால் உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள சஜல் அலி, ஒரு தனிமனிதனின் பண்பை குலைப்பதற்கு எந்த அளவுக்கு மோசமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறேன் என்றும் இது மிகவும் அருவருப்பானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதேவி நடித்த ’மாம்’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் சஜல் அலி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குப்ரா கான், மெஹ்விஷ் ஹயாத் மற்றும் மஹிரா கான் ஆகியோர்களும் பாகிஸ்தான் உளவு அமைப்பால் பயன்படுத்தப் பட்டனர் என்று அதில்ராஜா கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மேலும் சில தகவல்களை அதில்ராஜா தனது யூடியூப் சேனலில் தெரிவிப்பார் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
You may like
-
50 வயதில் 60வது குழந்தையை பெற்றெடுத்த டாக்டர்.. செஞ்சுரி அடிக்க போவதாக பேட்டி!
-
ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட்.. ஒரே குரூப்பில் இந்தியா-பாகிஸ்தான்: ஜெய்ஷா தகவல்
-
15 வயதில் மும்பையில் சொந்த வீடு வாங்கிய சிறுமி.. எப்படி தெரியுமா?
-
இந்த ஓட்டலுக்கு செல்ல வேண்டாம்.. தாக்குதல் நடத்தப்படலாம்.. அமெரிக்கா எச்சரிக்கை
-
இந்தியாவுக்கு வழங்கும் விலையில் பாகிஸ்தானுக்குக் கச்சா எண்ணெய் வழங்க மருத்து ரஷ்யா!
-
கிளாமராக நடிக்க கட்டாயப்படுத்தினார்கள்: 20 வருடங்கள் கழித்து மனம் திறந்த சிம்ரன்