உலகம்
பிரபல டென்னிஸ் வீராங்கனைக்கு மார்பக புற்றுநோய்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல டென்னிஸ் வீராங்கனையாக இருந்த மார்ட்டினா நவரத்திலோவா அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
செக்கோஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த மார்ட்டினா நவரத்திலோவா 1980, 90களில் பிரபலமான டென்னிஸ் வீராங்கனையாக இருந்தார் என்பதும் அவர் பல விருதுகளை குவித்தவர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் தொண்டையில் ஏற்பட்ட வலிக்காக மருத்துவரிடம் பரிசோதனை செய்தபோது அவருக்கு தொண்டையில் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. மேலும் அந்த புற்று நோய் ஆரம்ப நிலையில் இருப்பதால் உடனடியாக சிகிச்சை தொடங்கினால் அவர் விரைவில் குணமாகி விடுவார் என்றும் கூறப்பட்டது.
இதனை அடுத்து அவருக்கு மார்பகப் புற்றுநோய் குறித்த பரிசோதனை நடந்தபோது மார்பகப் புற்றுநோயும் இருந்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் தொண்டை புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் விரைவில் குணமடைந்து விடுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த இரட்டை புற்றுநோயை தான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றும் ஆனால் இது சரி செய்யக்கூடியது தான் என மருத்துவர்கள் கூறியிருப்பதால் மருத்துவர்களிடம் இருந்து சாதகமான முடிவை நான் எதிர்பார்க்கிறேன் என்றும் என்னால் முடிந்தவரை இந்த நோயை எதிர்த்து போராடுவேன் என்றும் மார்ட்டினா நவரத்திலோவா தெரிவித்துள்ளார்.

martina
செக்கோசிலோவாக்கியாவில் பிறந்த மார்ட்டினா நவரத்திலோவா அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடியுரிமையைப் பெற்று அந்நாட்டிற்காகவே டென்னிஸ் விளையாடினார். அவர் 332 வாரங்கள் தொடர்ச்சியாக மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் இடத்தில் நீடித்தார். அதேபோல் இரட்டையர் பிரிவில் 237 வாரங்கள் முதல் இடத்தில் நீடித்தார்.
தற்போது வரை டென்னிசு வரலாற்றில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் 200 வாரங்களுக்கும் மேலாக முதல் இடத்தில் நீடித்தது இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ட்டினா நவரத்திலோவா 18 முறை பல்வேறு டென்னிஸ் கோப்பையில் வெற்றி பெற்றுள்ளார். 31 முறைகள் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் 10 முறை கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் ஒரு தனி நபர் அதிக முறை ஆண் மற்றும் பெண் பிரிவில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
மேலும் இவர் 12 முறைகள் விம்பிள்டன் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். அதில் 1982 முதல் 1990 வரையிலான 9 ஆண்டுகள் தொடர்ச்சியாக விம்பிள்டன் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். மேலும் 9 முறை தொடர்ச்சியாக வெற்றியும் பெற்றுள்ளார்.