சினிமா செய்திகள்
இப்போதைக்கு திருமணம் இல்லை – கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தனக்கு தற்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றும், மேலும், பல நல்ல படங்களில் நடித்து, ரசிகர்களை மகிழ்விக்கவே ஆசையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம், கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றுத் தந்தது. மேலும், 2018ல் தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சாமி 2, சண்டக்கோழி 2, சீமராஜா, சர்கார் என ஆறு படங்களில் நடித்திருந்தார்.
இந்த ஆண்டும், நல்ல ஆண்டாக அமையும் என கீர்த்தி சுரேஷ் எதிர்பார்த்து வருகிறார்.
மாடலிங்காக இருந்த தனக்கு நடிப்பின் மீது ஆசையில்லை என்றும், அந்த வாய்ப்பு தனக்கு அமைந்தது தற்போது சந்தோஷத்தை தருவதாகவும் கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார்.
விஜய்யுடன் நடித்து விட்டதாகவும், தல அஜித்துடன் நடிக்கும் ஆசை விரைவில் நிறைவேறும் என்றும் தெரிவித்துள்ளார்.



















