சினிமா செய்திகள்
பழி வாங்குறதுன்னா இதுதான்: கீர்த்தி சுரேஷின் ‘சாணிக்காகிதம்’ டீசர்!

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக இணைந்து நடித்த ‘சாணிக்காகிதம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாரானது என்பது ஏற்கனவே அறிந்தது
மேலும் இந்த படம் அமேசான் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாகவும், ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது
இந்த டீசரில் பழி வாங்குவது என்றால் என்ன என்பதை ஆவேசமாக கீர்த்தி சுரேஷ் கூறும் காட்சிகள்இருப்பதை அடுத்து இந்த டீசர் படத்தின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் மே 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அமேசான் பிரைம் வீடியோ வெளியாக உள்ள இந்தப் படம் நிச்சயம் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.